
Sunday, 26 June 2016







எறும்பை வைத்தும் மழையை அறியலாம் என்கிறது புறநானூறு. எறும்பும் மழை பெய்யும் அறிகுறியைக் காட்டும்.
பண்டய தமிழ்ர்களின் அறிவு எவ்வளவு நுணுக்கமானது என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். அது மட்டுமல்லாது நம் முன்னோர்கள் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரையும் எவ்வளவு நேசித்துப் பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம்.
"பொய்யா எலிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு நுண் எறும்பு சில் ஒழுக்கு எய்ப்ப
(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்"
- புறநானூறு 21)
பொருள்:
சிறிய எறும்பு கூட்டம் மழை வரப்போவதை காற்றின் மூலம் அறிந்து தன் முட்டைகள் நீரில் அடித்துப் போகா வண்ணம் காப்பதற்காக தன் முட்டைகளை மேட்டு நிலப்பகுதியை நோக்கி எடுத்துச் செல்லுமாம். இந்த நுண்ணிய ஜீவனின் ஒழுக்க நெறியைப் பாரீர் என்கிறார் புலவர்.
இந்தப் பாடலின் மூலம் நாம் அறிவது என்ன நம் முன்னோர்கள் சிறிய உயிரினங்களிடமும் நாம் கற்றுக் கொள்ளும் விசயங்கள் உள்ளன என்பதை எடுத்துரைக்கின்றனர். இதை நாம் அறிவியல் கண் கொண்டும் காணலாம் வாழ்வியல் நெறி கண் கொண்டும் காணலாம்.
தமிழனின் அறிவியல்!!!
தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.
தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.
சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது; ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.
நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..
பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன.
தமிழர் பண்பாடு
பகுதி...59... பசுவின் சாணம் கிருமி நாசிணி மட்டுமல்ல காற்றின் மூலம் விஷவாயுவையும் கட்டுபடுத்தும் தன்மையுள்ளது அணுக்கதிர் வீச்சையும் முறியடிக்கும் சக்தியுடையது பசுவின் சாணம் என்பதை அறியவும்.மேலும் அவ்வீட்டிலுள்ள பெண்கள் காலையில் துயிலெழுந்து பசுவின் சாணத்தை கரைத்து வாசலில் தெளித்து பெருக்கி தூய்மைபடுத்தும் போது , இரவில் நமது பூமி வெளியிடும் தாக்கத்தை கட்டுபடுத்துகிறது , மேலும் கிருமிகள் வாசல் வழியாக நம் வீட்டினுள் நுழைவதையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் தரையிலிடப்படும் அரிசி மாவு கோலத்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், எறும்பு , பூச்சிகளுக்கும் உணவாக கிடைக்கப்பெறுகிறது. இவைகளை உண்ணும் இவ்வுயிர் வகைகள் நமக்காக இறைவனிடம் எனக்கு இந்த வீட்டில் தினசரி உணவளிக்கிறார்கள் , இவர்கள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுமாம் , ஆம் நமக்காக நாமே வேண்டிக்கொள்வதை விட பிறர் வேண்டிக்கொண்டால் சக்தி அதிகம் தானே ? இப்படி ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பாக பசுவின் சாணம் கரைத்து தெளிப்பதன் மூலம் காற்றில் பரவியுள்ள விஷவாயு ,கிருமிகள் அனைத்தும் அழித்து காற்று மண்டலத்தை சுத்தப்படுத்தப்படுகிறது , இது ஒருவருக்காகவா? இல்லையே, எல்லோரும்...
Subscribe to:
Posts (Atom)