Sunday, 26 June 2016

எறும்பை வைத்தும் மழையை அறியலாம் என்கிறது புறநானூறு. எறும்பும் மழை பெய்யும் அறிகுறியைக் காட்டும். பண்டய தமிழ்ர்களின் அறிவு எவ்வளவு நுணுக்கமானது என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். அது மட்டுமல்லாது நம் முன்னோர்கள் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரையும் எவ்வளவு நேசித்துப் பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம். "பொய்யா எலிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வன்புலம் சேரும் சிறு நுண் எறும்பு சில் ஒழுக்கு எய்ப்ப (சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்" - புறநானூறு 21) பொருள்: சிறிய எறும்பு கூட்டம் மழை வரப்போவதை காற்றின் மூலம் அறிந்து தன் முட்டைகள் நீரில் அடித்துப் போகா வண்ணம் காப்பதற்காக தன் முட்டைகளை மேட்டு நிலப்பகுதியை நோக்கி எடுத்துச் செல்லுமாம். இந்த நுண்ணிய ஜீவனின் ஒழுக்க நெறியைப் பாரீர் என்கிறார் புலவர். இந்தப் பாடலின் மூலம் நாம் அறிவது என்ன நம் முன்னோர்கள் சிறிய உயிரினங்களிடமும் நாம் கற்றுக் கொள்ளும் விசயங்கள் உள்ளன என்பதை எடுத்துரைக்கின்றனர். இதை நாம் அறிவியல் கண் கொண்டும் காணலாம் வாழ்வியல் நெறி கண் கொண்டும் காணலாம்.

No comments:

Post a Comment