Sunday, 26 June 2016


#சுமேரியா_எகிப்தில்_இந்திரன் #வழிபாடு! #உலகம்_முழுதும்_இந்திரன் #வழிபடப்படுவது_பாரத_மக்களுக்கு #பெருமைதரும்_விஷயமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் ஒலித்த அதே மந்திரங்கள் இன்று இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்களில் விழாக் காலங்களில் ஒலிப்பதும், “த்ரி கால சந்தியா வந்தனம்” நாள்தோறும் ஒலிப்பதும் அதிசயத்திலும் அதிசயமான விஷயம் ஆகும். அதைவிட அதிசயம், கரிகால் சோழன் முதல் சிலப்பதிகார காலம் வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட இந்திர விழா இன்றும் நேபாளத்தில் அதே பெயரிலும் தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் “நீர்ப் பெருக்கு விழா” (Water Festival) என்ற பெயரிலும் கொண்டாடப்படுவதாகும். இதை எல்லாம் பார்க்கும்போது ‘’ஒல்காப்புகழ் தொல்காப்பியன்’’ ஏன் இந்திரனையும் வருணனையும் தமிழ் தெய்வங்கள் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான் என்பதும் இதைவிட வியப்பான விஷயங்களைச் சொல்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனின் பெயரில் உள்ள அண்டிரன் (Andiran) என்பது இந்திரனின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் பெண் புலவர் அண்டிரனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் இந்த ரகசியத்தை வெளியிடுகிறார். அதை விட வியப்பான விஷயம் எகிப்தில் இந்திர த்வஜத்துடன் இந்திரனைக் கடவுள் என்ற பெயரில் வணங்கியதாகும். சுமேரியர் என்ன சளைத்தவரா? கிரேக்கர்கள் என்ன இளைத்தவரா? அவர்களும் கும்பிட்டதோடு வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கும் இந்திரன் பெயர்சூட்டினர். தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்திரன் சிலை இருப்பதும், நேபாளம் முதல் கண்டி வரை இன்றும் மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு இந்திரன், இந்திராணி, சசி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வதும் நாம் அறிவரும் அறிந்ததே. #இந்திர_அதிசயம்_1 எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். ! இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்! இந்திர அதிசயம் 2 சுமேரியாவில் அண்டர ANDARA என்றால் இந்திர என்று ஒரு புத்தகம் (India We Lost) கூறுகிறது. சுமேரிய, பாபிலோனிய மெசபொட்டோமிய நாகரீகம் நிலவிய இராக், சிரியா பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி (Dictionary of the Near East) கூறுகிறது. பழைய பாரசீக மொழியில் உள்ள Zend Avesta செண்ட் அவஸ்தாவில் இந்திரன் பெயர் இரண்டு இடங்களில் வருகிறது என்றும் அதுவும் அண்டிர என்ற சப்தத்தில் இருப்பதாகவும் இன்னொரு நூல் பகரும். #இந்திர_அதிசயம் 3 இந்திய புராணங்களில் இந்திரன் மனைவி பெயர் அய்ந்திரி Aindri. ஆக கணவன் பெயர் அய்ண்டிரன் என்பதில் பொருத்தம் உளது. மேலும் இந்திரன் மனைவி இந்திராணி, புலோமன் என்ற அசுரனின் பெண். ஆக ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை பொய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்திரன் கொன்ற 30 அசுரர்களில் இருவர் பிராமணர்கள்! ஆக இதுவும் ஆரிய திராவிட இனவெறிக் கொள்கையைத் தகர்க்கிறது. இந்திர அதிசயம் 4 கிரேக்கர்கள் கும்பிட்ட ZEUS சூஸ், ரோமானியர்கள் கும்பிட்ட JUPITER ஜூபிடர், நார்வீஜியர் கும்பிட்ட THOR தோர், கெல்ட்ஸ் கும்பிட்ட TARANIS தாரனிஸ் ஆகியோர் இந்திரன் போன்றே “இடி” எனும் வஜ்ர ஆயுதத்தை THUNDERBOLT கையில் வைத்திருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம். இதைவிட முக்கியமான செய்தி கேட்டை நட்சத்திரம் ஆகும். “ஜ்யேஷ்டா” என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்துக்கு அதிதேவதை இந்திரன். அந்த கிரேக்க நட்சத்திரத்தின் பெயர் ANTARES அண்டாரெஸ். அண்டிரன் என்பதையே இப்படி சொல்கிறார்கள். அவருக்கு இதற்கு விளக்கம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு இதற்கு வேறு பொருள் கற்பித்தனர்! இந்திர அதிசயம் 5 ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடல் PURANANURU 240-மற்றும்-241-ல் இரண்டு முக்கியச் செய்திகளைக் கூறுகிறார். 1.ஆய் அண்டிரன் இறந்தவுடன் “வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலில்” அவனை வரவேற்க முரசுகள் முழங்கி வானில் ஒலி எழுந்தது என்கிறார் புலவர்.— இதற்கு மூன்றுவிதப் பொருள் உண்டு (அ) அவர் இறந்த அன்று மழைமூட்டமாக இருந்ததால் இடி இடித்தது (ஆ) அவர் நிறைய கொடையளித்துப் புண்யம் சம்பாதித்ததால் அவர் சொர்க்க (இந்திர) லோக

No comments:

Post a Comment