நாகர்கள் என்பது யார்? எப்பிரதேசங்களில் வசித்தார்கள்? என்பது பற்றி விஞ்ஞான விளக்கங்களுடன்.
பூமியின் உள்ளே உள்ள லாவா எனப்படும் நெருப்பு குளம்பானது சில காலங்களில் மேல் எழும்பி நிலங்களாக உருவாகின்கின்றன. இவ்வாறு மேலே எழும் நெருப்புக்குழம்புகளை நாகம் என்று சொல்லும் வழக்கம் நம் நாட்டில் இருந்திருக்கிறது.
பாம்புகள் பூமிக்கடியில் வசிப்பதாலும்
பூமியைக் குடைந்து அடி மண்ணைப் புரட்டிப் போட்டு
எறும்புகள் கட்டும் புற்றுக்குள் பாம்புகள் வசிப்பதாலும் இந்தப் பெயர்.
பூமியைப் புரட்டிப்போட்டாற்போல வெளிப்பட்டு
பிறகு நிலபாகமாக மாறும்
பூமிக் குழம்புகள் உள்ள பகுதிக்கு
நாகர்கள் வசிக்குமிடம் என்று பெயரானது.
இப்படி எங்கெல்லாம் நிலபாகங்கள் ஏற்பட்டனவோ
அங்கு வசிப்பவர்களுக்கு நாகர்கள் என்னும் பெயரும் ஏற்பட்டது.
புராணங்களில் வாசுகி எனும் நாகம் மேரு மலையை அச்சாகக் கொண்டு,
வாசுகியை நாணாகக் கொண்டு
தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்தனர்
என்பது பல புராணாங்களிலும் சொல்லப்படும் கருத்து.
மேரு என்பது வடக்கு தெற்காகச் செல்லும் பூமியின் அச்சாகும்.
அதன் உச்சி வட துருவமாகும் என்பது சூரிய சித்தாந்தம் தரும் செய்தி.
இந்த அச்சு இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது.
அந்த சுழற்சி காரணமாக,
பூமியின் வட பகுதியிலும், தென் பகுதியிலும்,
பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.
அந்தச் சுழற்சி காரணமாக,
கடலுக்கடியில் இருக்கும் பூமிக் குழம்புகள்
கடையப் படுவது போல அலைக்கழிக்கப்படுகிறது.
இதனால், பூமியடியில் உள்ள வாயுக்களும்,
கனிமங்களும், நிலப்பகுதிகளும்
மேலும், கீழுமாகப் புரட்டிப் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதுவே ‘சமுத்திர மந்தன்’ என்னும் கடலைக் கடைதல் கதை.
இது மறை பொருளாகச் சொல்லும் இயற்கை வர்ணனையாகும்.
இந்த வருணனையில், பூமியின் அச்சு மேரு மலையாகும்.
வடபாகம் தேவர்கள், தென் பாகம் அசுரர்கள் ஆவார்கள்.
கடையப்படும் பூமிக் குழம்பு வாசுகி ஆவாள்.
இந்தக் கடைதலில் இரண்டு புறமும் நகர்ந்து கொண்டிருப்பது
ராகு, கேது என்னும் இரண்டு பாம்புகள்.
இப்பொழுது நாகர்கள் என்ற விடயத்துக்கு வருவோம்
எங்கெல்லாம், பூமிக் குழம்பு வெளிப்பட்டு,
குளிர்ந்து, நிலமாக ஆகி இருக்கிறதோ,
அங்கு வசிக்கும் மக்கள் நாகர்கள் எனப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு நாக வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதனால் காஷ்மீரிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்.
இமயமலைப் பகுதிகள் பலவற்றிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்
என்பதை மஹாபாரதம் மூலம் அறிகிறோம்.
காண்டவப்ரஸ்தத்தில் அர்ஜுனனால் நாகர்கள் விரட்டப்பட்டு
விந்திய மலைக்குத் தெற்கே குடியேறினார்கள் என்றும் பாரதம் சொல்கிறது.
கிருஷ்ணனது சகோதரனான பலராமன்,
சேஷனது அவதாரம் என்று சொல்லப்படுபவன்.
அவனது அடையாளம் கலப்பையாகும்.
பூமியை உழுது, புரட்டி எடுக்கும் வேலையைச் செய்ததால்
அவன் நாகன் எனப்பட்டிருக்க வேண்டும்.
மஹாபாரதம் 13- 132 –இல் பலராமன் ஒரு நாகன் என்று சொல்லப்பட்டுள்ளது.
நாகர்கள் எனப்படுவோர் வட இந்தியா தென் இந்தியா உட்பட இலங்கையிலும் அதிகமாக இருந்துள்ளனர்.
இலங்கயைில் ஆதிக்குடிகளே இயக்கரும் நாகரும் என்று சொல்கின்றது பெளத்த நுhல்களான மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றது..
தொடரும்
idhu mari information la endha book refer pandringa enaku adha pathi detailed ah therinjukanumnu asai
ReplyDelete