Sunday, 26 June 2016


தமிழனின் மரபணு இப்படியான ஒரு பதிவு ஏன் எழுதவேண்டியதேவை வந்தது. அண்மைக்காலங்களில் சீமான் தமிழன் தமிழன் என்று சொல்வதும் அதற்கு எதிர் தரப்பில் இருந்து சீமான் என்ன டீஎன்ஏ மெசின் வைச்சா தமிழன் என்று சேட்டிபிக்கட் கொடுக்கிறான் என்பதும் தங்களை இதுவரை தமிழன் என்று பிறருக்கு காட்டிகொண்டுவந்தவர்களின் விவாதம். உண்மையாக தமிழனின் டீஎன்ஏ கப்லோ குறூப்தான் என்ன? இது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று திராவிடத்தை வெறுக்கும் அதிகமான தமிழர்கள்கூட ஆரியம் என்ற கருத்தை கைவிட அவர்கள் தயாரில்லை. அதனால் ஆரியர்களின் டீஎன்ஏ ஐ அறிய முதல் நமது டீஎன்ஏ ஐ அறிவோம். அதிகமாக டீஎன்ஏ என்பது அதிகமாக எல்லோருக்கும் தெரியும் அதை தெளிவாக யாருக்கும் விளங்கப்படுத்தவேண்டிய தேவையில்லை. ஆனால் அதன் பயன்பாடு சரியாக புரிந்து இருக்கின்றதா என்று தெரியாது. குறிப்பாக ஒரு குழந்தைக்கு யார் தகப்பன் என்பதை இப்பொழுது விஞ்ஞான ரீதியாக தெளிவாக உறுதிப்படுத்துவது இந்து பரிசோதனை மட்டும்தான். அப்போ நம்ம பாட்டன் முப்பாட்டனையும் இதன் மூலம் கண்டுபிடிக்கமுடியும்தானே! டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். (சிலர் தமிழில் என்ன பதம் என்று அறியவேண்டும் என்பதற்காக) இந்த இனக்கீற்று அமில பரிசோதனை மூலம் உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் இன்றைய மனிதர்களின் மரபணு மூலக்கூறுகளைக் கொண்டு மனிதனின் மூதாதையர் எங்கு தோன்றினர், பின்னர் மனிதப்பரவல் எங்கெங்கெல்லாம் பரவியது என்பதைக் காண முடியும். அந்த மரபணு ஆய்வின் அடிப்படையில் பழங்கால தொன்மையான மனித இனத்தின் மரபணு வகை இரண்டே இரண்டு தான் உள்ளது. ஒன்று M 1 ஆப்பிரிக்க மரபணு மற்றொன்று M 2 இந்திய மரபணு. இவை இரண்டில் எது அதிக தொன்மையானது என்ற கேள்விக்கு சிலர் ஆப்பிரிக்க வகை என்று சொல்லும்போது, வேறு சிலர் இந்திய தமிழ் மரபணு தான் தொன்மையானது என கூறுகின்றனர். இவை பற்றியே கீழுள்ள ஆங்கிலத்தகவல்கள் விளக்கம் தருகின்றன. தமிழ் தொன்மைக்கு கூறப்படும் காரணம். 1. ஆப்பிரிக்க மரபணு ஆப்பிரிக்கா முழுவதும் இல்லை. எத்தியோப்பியா, எகிப்து பகுதியில் மட்டும் தான் காணப்படுகிறது. 2. தமிழ் (தென்னிந்திய) மரபணு 75 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது மட்டுமல்ல ஆசியா, தென்கிழக்காசியா முழுவதற்கும் மூல அடிப்படையாக இருக்கிறது. M2, M3, M4, M5, M6, M18 மற்றும் M25 வரை எல்லாம் இந்தியாவுக்குரியதுதான். ஆகவே மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் இந்தியாவில் ஏற்பட்ட போர்கள் மற்றும் கடற்கோள்களின் காரணமாக தமிழ் இனம் பல்வேறு இடபெயர்வுகளை சந்தித்திருக்கவேண்டும். ஆகவே அந்தகாரணம்கள்தான் இன்றும் வேறுபிரதேசங்களில் எம் வகையான டீஎன்ஏ இருப்பதற்கு காரணம். இதில் M வகையான DNA Haplogroup 70.18% விகிதமான தமிழர்கள் கொண்டுள்ளனர் இதில் எம் வகையில் Subgroup M5a (14.03%), M2a (12.28%) தமிழ்நாட்டில் கொண்டுள்ளனர். இந்த சப்குறூப் ஆனது (M5a + M2a) வேற இனங்களில் இல்லாத அரிய ரீஎன்ஏ குறூப் ஆகும். ஆகவே நாம் முயன்றால் யார் உண்மையான தமிழன் என்பதனை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். இதே நிலையை இலங்கையில் பார்த்தால் M (41.67%–43.59%) ஆனால் இலங்கைத்தமிழர்கள் 11.1% சதவிகிதம் பேர்தான் இருக்கின்றனர். மிகுதி யார்????? இதில் அதிகளவு சிங்களவர்களின் டீஎன்ஏயும் தமிழர்களின் டீஎன்ஏயுடன் ஒத்துப்போகின்றது. இதை அறியாமல் சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க காரணமாகவும் அமைக்கின்றனர். இத்துடன் இந்த பதிவினை முடிக்கின்றேன். அதிகம் எழுதினால் வாசித்து விளங்கிக்கொள்வது கடினம் என்பதனால். (சில நாடுகள் இவ்வாறான ஆராட்சியை மேற்கொண்டு அந்த ஆராட்சி தாங்கள் எதிர்பார்த்தற்கு எதிராகவே அமைந்தது ஆகவே ஆய்வை இடையில் நிறுத்திவிட்டு முன்னும் பின்னும் பொத்திக்கிட்டு போய்விட்டார்கள்) தெலுங்கர் கன்னடர் இலம் திராவிடர்கள் டீஎன்ஏ என்னவென்று பிறிதொரு சந்தற்பத்தில் பார்ப்போம். ஆதாரம் "Molecular Anthropology: Population and Forensic Genetic Applications." Anthropology Today: Trends, Scope and Applications, Anthropologist Special Volume No. 3 (2007) guest-edited by Veena Bhasin and M. K. Bhasin: Chapter 29 on pages 373-383. Page 380. S. S. Papiha, Sarabjit S. Mastana, C. A. Purandare, R. Jayasekara, and R. Chakraborty. "Population genetic study of three VNTR loci (D2S44, D7S22, and D12S11) in five ethnically defined populations of the Indian subcontinent." Human Biology 68:5 (October 1996): pages 819-835. Contrary to Kshatriya's study, but coinciding with Mastana's study, Sinhalese people were found to be less descended from Tamils than from Bengalis. Vajira H. W. Dissanayake, Victoria Giles, Rohan W. Jayasekara, Harshalal R. Seneviratne, Noor Kalsheker, Fiona Broughton Pipkin, and

No comments:

Post a Comment