Sunday, 26 June 2016


இது பண்டைய காலத்து AC (Air Conditioner). இயற்கையை பாழ்படுத்தாத AC. புறநானூறு விளக்கும் அதிசயம்: ----------------------------------------------------------------------------------- பண்டைய காலத்தில் இன்றைக்கு போல Mechanical AC வசதியெல்லாம் இல்லை. ஆனாலும் மக்கள் வெயில் காலங்களில் குளுமையுடனேயே வாழ்ந்துள்ளனர். அதற்காக அவர்கள் செய்து கொண்ட தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது. அதை புறநானூற்றின் வாயிலாகவே அறிவோம் வாருங்கள். “தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்” (புறம் 77) ”புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப், பனிக்கயத் தன்ன நீள்நகர்”(புறம் 378) பொருள்: ------------- கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்கப்பட, தை மாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலக் குளிர்ச்சியாகவும் அகலமாகவும் வீடுகள். புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனை. தெளிவான விளக்கம் மற்றும் அறிவியல்: ------------------------------------------------------------- சுதை என்றால் சுண்ணாம்பு. பண்டைய காலங்களில் அனைத்து வீடுகளிலும் சுண்ணாம்பு தொட்டியும் தொட்டி நிறைய நீரும் இருக்கும். இந்த வகை தொட்டியை இன்றைக்கும் பல கிராமங்களில் காணலாம். சுண்ணாம்பானது நீரை குளிரூட்ட வல்லது. இவ்வகை தொட்டியை வீட்டின் நடுவில் நீர் நிரப்பி மலர்களால் அலங்கறித்து வைத்துவிடுவர். இதன் இரகசியம் வீட்டை குளுமைப் படுத்துவதற்காகவே. இதன் காரணத்தால்தான் வீட்டிற்கு பண்டிகை காலங்களில் சுண்ணாம்பு பூசி வெண்மைபடுத்தி, வீட்டை குளிரூட்டுவர். --------------------------------------------------------------------------------- இன்றைய காலகட்டத்தில் Distemper, Paint என்று வீட்டை அழகுபடுத்துவதற்குதான் முனைகிறார்களே தவிற ஆரோக்கியமான வீட்டை கட்டுவதற்கு எவர் முன் வருகிறார்?. நாமும் இந்த முறை பின்பற்றி வீட்டை குளிரூட்டலாமே.....

No comments:

Post a Comment